Tuesday, April 24, 2007

செய்தி: உலகின் மொத்த துப்பாக்கிகளும் G8 எனப்படும் எட்டு முன்னேறிய நாடுகளில்தான் செய்யப்படுகின்றன.இவற்றில் ஜப்பான் மட்டுமே துப்பாக்கி விற்பனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளது.

கேள்விப்பட்ட பொழுது சிரிக்காமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. இந்த சின்ன உலகப்பந்துக்குள் எவ்வளவு போலி வேடங்கள்? தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம், என்று எத்தனையோ பேச்சுக்கள் கேட்டு காதுகள் புளித்து போயாயிற்று.இக் கருத்துகளை எல்லாம் தமக்கே சொந்தமென கருதும் நாடுகளே இத்துப்பாக்கிகளையும் ஏற்றுமதி செய்கின்றன..இதில் மட்டும் மேற்சொன்ன தனிமனித உரிமை, பாதுகாப்பு, சுதந்திரம் என்னவாயின என்று தெரியவில்லை. இது ஒருபக்கமிருக்கட்டும்..

இவற்றை காசு கொடுத்து வாங்கி சுதந்திரத்திற்காக போராடும்(அல்லது போராடுவதாக மார்தட்டும்) மூன்றாம் உலக தீவிரவாத அன்பரே! நீங்கள் கொடுக்கும் காசு முழுக்க முழுக்க நீங்கள் எதிரியாக கருதும் நாடுகளுக்கு போய் சேர்கின்றனவே! அது உமக்கு தெரிகிறதா? இல்லை நீரும் அவர்போல அச்சமயத்தில் மட்டும் கண்களை வேறுபுறம் திருப்பிக்கொள்விரா? அப்படி இருவரும் முகம் திருப்பிக் கொண்டீரானால், உங்களது போரினை என்னவென்று பெயரிட?

2 comments:

கொழுவி said...

நல்ல அலசல்.
தீவிரவாதிகள் தாங்களே துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
அல்லது இந்த நாடுகளிடம் துப்பாக்கி வாங்காமல் தங்களால் உற்பத்தி செய்யக்கூடிய கத்தி, பொல்லு, வில், அம்பு கொண்டு சண்டை செய்ய வேண்டும்.

Arun Appadurai said...

பின்னூட்டத்திற்கு நன்றி கொழுவி,

/தீவிரவாதிகள் தாங்களே துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய வேண்டும்./

நூற்றுக்கு நூறு உண்மை! இந்த அளவிற்கு கொள்கையில் பிடித்தம் உள்ள தலைவர்களுக்காகத்தான் உலகத்தின் பல இடங்களும் தவமிருக்கின்றன..மற்றவர்கள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்புகள் மட்டுமே!